நகராட்சி மக்களுக்கு புதிய விடியல். நகராட்சி நிர்வாக சீர்திருத்தம் கூடுதல் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப.
The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
தமிழகத்தில் தற்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி சந்திக்கும் பெரும் பிரச்சனைகள் சுகாதாரம், வரிப் பிரச்சனைகள், அதைவிட பேனர்களால் ஏற்படும் உயிரிழப்பு.
மேலும் மக்கள் தொகை அதிகரிப்ப்பால் ஏற்படும் கழிவுநீர் பிரச்சனைகள் பொதுமக்களை பெரிதும் பாதிக்கின்றன.
இவற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவும், அவர்களின் பிரச்சனைகளை மிகவும் எளிதாக தீர்க்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப.
ஒரு திட்டத்தை தீட்டி அரசுக் அளித்துள்ளார்.
விளம்பரப் பதாகைகள் கழிவுநீர் மேலாண்மை போன்றவை தொடர்பாக மக்கள் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. வழங்கியுள்ளார்
அவரது உத்தரவு:
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் உள்ள கூறுகள் மற்றும் திருத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிகள் ஆகியவற்றை எந்த தடையுமின்றி நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது குறிப்பாக சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுப்பது மீறி வைத்தால் அதற்கு தண்டனை விதிப்பது போன்ற விதிமுறைகள் கடந்த ஏப்ரலில் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது இதற்காக நான்கு துணைக் குழுக்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணியமைப்பில் தேவைப்படும் மாற்றங்கள் மன்றக் கூட்டங்களில் குறிப்பிடப்படும் அம்சங்கள், சொத்துவரி, விளம்பரப் பதாகைகள், உரிமங்கள், பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு மேலாண்மை போன்றவை தொடர்பாக பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களை புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணைக் குழுக்கள் ஆராயும்.
1)பணியமைப்பு தொடர்பான விவகாரங்கள்:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பணியமைப்பு தொடர்பான விவகாரங்கள் அதிலுள்ள பிரச்சனைகளை களைந்திடவும், உரிய பரிந்துரைகளை அளிக்கவும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் இணை செயலாளர், துறையில் சட்ட விஷயங்களைக் கவனிக்கும் இணைச்செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி பொது நிர்வாகப் பிரிவு உதவி ஆணையாளர், பேரூராட்சிகள் இயக்குநகரத்தின் இணை இயக்குனர், (பணியமைப்பு) நகராட்சி நிர்வாக இயக்குநகரத்தின் இணை இயக்குனர், (மாநகராட்சிகள்) ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.
2) மற்றக் கூட்ட விவகாரங்கள்:
மன்ற கூட்டங்கள் மன்றக் கூட்டங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், விவாதங்களை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி), நகராட்சி நிர்வாகத் துறை இணை இயக்குனர், நகராட்சி நிர்வாகத் துறையில் சட்டங்களை கவனிக்கும் இணை செயலாளர், பேரூராட்சிகள் இயக்குநகரத்தின் கூடுதல் இயக்குனர், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி மூத்த சட்ட அதிகாரி ஆகியோர் இடம் பெற்றிருப்பார்.
சொத்துவரி, விளம்பர பதாகைகள், உரிமங்கள்:
விளம்பர பதாகைகள் அவை தொடர்பான உரிமம் பெறுதல் போன்ற பணிகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சிகளை பொதுமக்கள் நாட வேண்டியுள்ளது. இது தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகள் கருத்துகளைப் பரிசீலிக்க 5 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) நகராட்சி நிர்வாகத் துறை இணை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறையில் சட்ட விவகாரங்களை கவனிக்கும் இணைச்செயலாளர், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குனர், நகராட்சி நிர்வாக இயக்குநகரத்தின் இதில் கூடுதல் இயக்குனர் ஆகியோர் இடம் பெறுவர்.
பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு மேலாண்மை போன்ற பணிகள் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள், புகார்களை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட துணை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர், சுகாதாரம், நகராட்சி நிர்வாகத் துறையில் சட்ட விவகாரங்களை கவனிக்கும் இணை செயலாளர், பேரூராட்சிகள் இயக்குநகரத்தின் கூடுதல் இயக்குனர், நகராட்சி நிர்வாக இயக்குநகரத்தின் கண்காணிப்பு பொறியாளர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர், பெருநகர சென்னை மாநகராட்சி கழிவுநீர் வடிகால் பிரிவின் செயற்பொறியாளர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்.
துணைக் குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விஷயங்களை தீர ஆய்வு செய்து நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் மூலமாக அரசுக்கு அனுப்ப வேண்டும்.
மூன்று மாதங்கள் அல்லது குறிப்பிட்ட காலக்கட்டங்களில் அறிக்கைகளை அரசுக்கு அளிக்கலாம் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் சிவதாஸ் மீனா
0 Comments