வரலாற்று சிறப்பு தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் ஓய்வு
The Forecast 2 years ago நீதித்துறை
உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய மூத்த நீதிபதியான கே.எம்.ஜோசப் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான கே.எம்.ஜோசப் நேற்றுடன் ஓய்வு பெற்றார். கடந்த 1958ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி கேரள மாநிலத்தின் கோட்டயத்தில் பிறந்த இவர், கல்லூரி படிப்பை சென்னை லயோலா, எர்னாகுளம் அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றில் முடித்தார்.இதையடுத்து கேரள உட்பட பல்வேறு உயர்நீதிமன்றங்களின் சுமார் ஒன்பது வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசப் பின்னர், கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.ஜல்லிக்கட்டு, குட்கா, ராஜேந்திர பாலாஜி, கோவை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் நீதிபதி கே.எம்.ஜோசப் தீர்ப்பளித்துள்ளார்.
0 Comments