கேரள மாநில தலைவர் கைது எதிரொலி பழிவாங்கும் அரசியலுக்கு காங்கிரஸ் பயப்படாது: ராகுல்காந்தி ஆவேசம்
The Forecast 2 years ago கேரளா
பழிவாங்கும் அரசியலுக்கு காங் கிரஸ் பயப்படாது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனுக்கு நினைவிடம் கட்டுவதற்காக கே.கருணாகரன் அறக்கட்டளைக்கு கிடைத்த நிதியில் இருந்து ரூ.32 கோடியை கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே. சுதாகரன் மோசடி செய்ததாகவும், கண்ணூர் காங்கிரஸ் அலுவலகம் கட்டும் நிதியிலும் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. ஜூன் 23ம் தேதி இந்த வழக்கை விசாரித்த மாநில குற்றப்பிரிவு போலீசார் சுதாகரனை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இதை தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சுதாகரன் அறிவித்தார். அதை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை. இதை தொடர்ந்து டெல்லி சென்ற சுதாகரன் நேற்று ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அவருடன் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் ஆகியோர் உடனிருந்தனர். அதை தொடர்ந்து ராகுல்காந்தி வெளியிட்ட டிவிட்டில்,’ காங்கிரஸ் கட்சி மிரட்டல் மற்றும் பழிவாங்கும் அரசியலுக்கு அஞ்சவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
0 Comments