Loading . . .




புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப.நியமனம்

The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு இ.ஆ.ப. இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணியில் நீடிப்பார். நகராட்சி நிர்வாகம்-நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்து நகராட்சி நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வந்தவர் சிவ்தாஸ் மீனா தற்போது தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய பணி தமிழகத்திற்கு மேலும் மெருகேற்றும் படி இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் மேலும்  இவருடைய நிர்வாகத்தில் தொழிலாளர் நலத்தில் அக்கறை கொண்டவர் என்ற பெயர் உண்டு.

 ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். கடந்த சில நாட்களாக புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News