தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவு
The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
சென்னை: தமிழகத்தில் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்திருக்கும் உத்தரவில், உயர்கல்வித் துறை செயலாளராக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் (கூடுதல் பொறுப்பு)நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரீஷ் தக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக இருந்த பிரபாகர் தாஸ், சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளம் துறை கூடுதல் செயலாளராக மங்கத் ராம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணை மேலாண் இயக்குநராக (நிதி) விஷு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக ஆனந்த் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments