Loading . . .




சென்னையில் ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. பார்வையிட்டு ஆய்வு

The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் வார்டு 156க்குட்பட்ட லலிதா நகர் 2வது தெருவில் வெள்ள தடுப்பு நிதி ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் முனைவர் தா. கார்த்திகேயன் இ.ஆ.ப.,அவர்கள், இணை ஆணையர் பணிகள் டாக்டர் ஜி எஸ் சமீரன் இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிநிறற்று வாரிய செயல் இயக்குனர்  சிம்ரன் ஜித் சிங் கலோன் இ.ஆ.ப., அவர்கள், தெற்கு வட்டார துணை ஆணையர்  எம் பி அமீத் இ.ஆ.ப., அவர்கள், உட்பட பலருடன் இருந்தனர்

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News