நடிகர் விஜய் 2-வது நாளாக இன்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். அண்மையில், 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிலையில், நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று திடீரென்று சந்தித்தார். சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில், 234 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.
0 Comments