சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
The Forecast 2 years ago நீதித்துறை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 2 வழக்குரைஞர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.
மேலும், இரு வழக்குரைஞர்களை மும்பை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கௌல், சஞ்சீவ் கன்னா ஆகியோர் இடம் பெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது.
வழக்குரைஞர்கள் என்.செந்தில்குமார், ஜி.அருள் முருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
வழக்குரைஞர் மஞ்சுஷா அஜய் தேஷ்பாண்டே மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் வழக்குரைஞர் குருபரஹள்ளி வெங்கடராமரெட்டி அரவிந்த் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கொலீஜியம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments