Loading . . .




உலக முதலீட்டாளர் மாநாட்டு சிறப்பு அதிகாரி வி.அருண்ராய் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவு

The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக வி.அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

1. தேவ் ராஜ் தேவ் - அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர், கோவை)

2.பி.ஆகாஷ் - தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைச் செயலர்)

3. நிஷாந்த் கிருஷ்ணா - தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்)

4.வி.அருண் ராய் -குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை செயலர், உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரி பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதே பதவி: கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் இரண்டாவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக வி.அருண் ராய் - செயல்பட்டார். மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுப்பது, அழைப்பிதழ்களைத் தயாரித்து அனுப்புவது உள்பட முதலீட்டாளர் மாநாட்டுக்குரிய அனைத்துப் பணிகளையும் சிறப்பு அதிகாரி ஒருங்கிணைப்பார்.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News