பருவமழைக்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப.
The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., தலைமையில் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிருவாகத்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர்கள் (Monitoring Officers), மண்டல அலுவலர்கள் (Zonal Officers) மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments