அவதூறு வழக்கில் ஐகோர்ட்டில் ராகுல்காந்தி மனு - 'மனுதாரர் புதிய ஆவணங்களை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும்
The Forecast 2 years ago காங்கிரஸ்
அவதூறு வழக்கில் ஐகோர்ட்டில் ராகுல்காந்தி மனு - 'மனுதாரர் புதிய ஆவணங்களை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும்'
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் புதிய ஆவணங்களை சமர்ப்பிக்க தடை கேட்டு ஐகோர்ட்டில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் காரணம் என்று ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ராஜேஷ் குண்டே என்பவர் தானே மாவட்டம் பிவண்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் புதிய ஆவணங்களை சமர்ப்பிக்க ராஜேஷ் குண்டேவுக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து ராகுல் காந்தி மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ராஜேஷ் குண்டே இந்த வழக்கில் புதிய ஆவணங்களை சமர்ப்பிக்க கோரிய அனுமதியை 2021-ம் ஆண்டு ஐகோர்ட்டின் அமர்வு ஏற்கவில்லை. இந்த நிலையில் புதிய ஆவணங்களை சமர்ப்பிக்க குண்டேயை அனுமதித்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் பாரபட்சமானது. இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் மனு ஐகோர்ட்டின் நீதிபதி எஸ்.வி. கோட்வால் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இதேபோன்ற மனுவை ஐகோர்ட்டின் ஒருங்கிணைந்த அமர்வு விசாரித்தது. அதே அமர்வு ராகுல் காந்தியின் இந்த மனுவையும் விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று நீதிபதி கூறினார்.
0 Comments