Loading . . .




அனைத்து மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்-அமைச்சர் செஞ்சி கே எஸ். மஸ்தான்

The Forecast 2 years ago சிறுபான்மைத் துறை

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ், தமிழர், நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ். மஸ்தான் அவர்கள் அனைத்து மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல  அலுவலர்களுடன் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கடனுதவிகள் தொடர்பாக   ஆய்வு செய்தார்.

மேலும், துறையின் திட்ட செயல்பாடு, இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி / பள்ளி விடுதிகளின் நிர்வாகம், அரசு அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி / ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த சிறுபான்மையின மாணவ / மாணியர்களுக்கு ஒன்றிய அரசின் (100… நிதி பங்களிப்புடன்) கூடிய கல்வி உதவித் தொகை திட்டங்கள், முஸ்லிம் கிறித்தவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் நிதியுதவி வழங்கும் திட்டம், விலையில்லா மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்குதல்,உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மிதிவண்டி  வழங்குதல்,உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நிதி உதவிகள், பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், கிறித்துவ தேவாலயங்கள் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிக்காக நிதியுதவி வழங்கும் திட்டம், கபரஸ்தான் மற்றும் அடக்கஸ்தலங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் திட்டம், கபரஸ்தான் மற்றும் அடக்கஸ்தலங்களுக்கு புதிய சுற்றுசுவர் ( ம ) பாதை புனரமைத்தல் திட்டம், பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம், பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் முன்னேற்ற விவரம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவர்களிடம் கலந்தாலோசித்தார்.

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ், மஸ்தான் அவர்கள். மேற்கண்ட திட்டங்களை எவ்வித தொய்வும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்திடுமாறும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விடுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், மேற்படி நலத்திட்ட உதவிகள் மாணவ / மாணவியர்கள் / சிறுபான்மையின மக்களுக்கு  எவ்வித தடங்கலும் இல்லாமல் சென்றடைய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

மேற்படி ஆய்வு கூட்டத்தின் போது பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளர் . ரீட்டா ஹரிஷ் தக்கர் இ.ஆ.ப. பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்பு செயலர்  ஹனிஷ் சாப்ரா, இ.ஆ.ப., சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர்  எம். ஆசியா மரியம் இ.ஆ.ப., மற்றும் அனைத்து மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலர்கள் உடன் இருந்தனர்.


0 Comments

Post your comment here

சிறுபான்மைத் துறை Relateted News