Loading . . .




ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தின் ஓராண்டு நிறைவு நாள்: எக்ஸ் சமூக இணையதளப் பக்கத்தில் சிறப்பு காணொளி வெளியீடு

The Forecast 2 years ago காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொண்ட ஒற்றுமை பயணம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைத்திருப்பதை அடுத்து சிறப்பு காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதனை தனது எக்ஸ் சமூக இணையதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ராகுல், இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களிடையே உருவான ஒற்றுமை மற்றும் அன்பு ஆகியவை நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்த அடித்தளமாக மாறியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். நாட்டில் வெறுப்புணர்வு மறையும் வரை இந்தியா ஒன்று சேரும் வரை தமது பயணம் தொடரும் என்று கூறியிருக்கும் ராகுல் இது மக்களுக்கு தான் அளிக்கும் வாக்குறுதி என்றும் பதிவிட்டு காணொளியை பகிர்ந்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு பற்றிய ராகுல்காந்தியின் 3 நிமிட சிறப்பு காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News