சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக ஆதரிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றன. ஒன்றிய பாஜக ஆட்சி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஆட்சியை விட்டு போக வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய பாஜக அரசால் நடத்த முடியவில்லை என்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து நடத்திக்கொள்ளும். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகே மக்களின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸில் 4 முதலமைச்சர்களில் 3 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறினார்.
0 Comments