திருநெல்வேலியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் இ. ஆ. ப., மாவட்ட முதன்மை நீதிபதி சந்திர ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், குடிநீர் வழங்கல் துறை நிர்வாக பொறியாளர் ராமலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கொண்டு குடிநீர் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பள்ளி மாணவ, மாணவிகள் வ உ சி மைதானத்தில் தொடங்கி பாளை பஸ் நிலையம் வழியாக தூய யோவான் பள்ளி வரை சென்றனர். பேரணியில் மக்கள் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகளை குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், உதவி நிர்வாக பொறியாளர்கள் மயில்வாகனம், ராமசாமி, டேனியஸ், மற்றும் மாணவ மாணவிகள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments