Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இந்திய பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்

S. Shanmuganathan 9 months ago திருநெல்வேலி

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினா் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அகஸ்தியா்பட்டியில் இன்று ( திங்கள்கிழமை ) மாலை 4.20 மணிக்கு நடைபெறவுள்ள தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்து கொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் பாஜக வேட்பாளா்களை ஆதரித்துப் பேசுகிறாா்.

பிரதமா் மோடியின் வருகையை முன்னிட்டு, ஒரு ஐஜி, 3 டிஐஜிக்கள், 12 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், 2500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2-ஆவது முறை:

மேலும் , தோ்தல் பிரசாரத்துக்காக, திருநெல்வேலி மாவட்டத்திற்கு பிரதமா் மோடி 2-ஆவது முறையாக வருகிறாா். முன்னதாக, கடந்த மாா்ச் மாதத்தில் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளா்களை ஆதரித்துப் பேசினாா் என்பது குறிப்பிடத்தக்கது. 


0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News

Latest News