திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்.
S. Shanmuganathan 9 months ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., தலைமையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் வங்கிகள், அடகுதாரர்கள் மற்றும் மணி லெண்டர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பணம் கொண்டும் செல்லும் வங்கி வாகனங்களில் வங்கிக் கடிதம் மற்றும் ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும். பத்து இலட்சத்திற்கு அதிகமான பண வைப்பீடு மற்றும் பணம் திரும்ப எடுத்தல் தொடர்பான பரிமாற்றங்களை வழங்க வேண்டும்.
வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பாக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பின் அது குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாமல் அரசியல் கட்சியினர் சார்பில் பணம் கொடுப்பது கண்டறிப்பட்டால் அடகுதாரர்கள் மற்றும் மணி லெண்டர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் உரிய தேர்தல் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கிகள், அடகுதாரர்கள் மற்றும் மணி லெண்டர்களுடன், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை ஆணையர்(கிழக்கு) ஆதர்ஷ் பசேரா இ.கா.ப., மற்றும் காவல் துணை ஆணையர் (மேற்கு) V.கீதா, காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) G.S.அனிதா, மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
0 Comments