ரூபாய் 20000 மதிப்புள்ள, 46 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.ஆர். சங்கரலிங்கம், எஸ் ராமசுப்பிரமணியன், மீன்வளத்துறை ஆய்வாளர் சுமதி, மேற்பார்வையாளர் பாலு குமார் ஆகியோர்
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் மீன் விற்பனை செய்யும் கடைகளில், உணவு பாதுகாப்பு துறையும். மீன்வளத் துறையும் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ரா சப்னம் ஆகியோர் ஆலோசனையின் பெயரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.ஆர். சங்கரலிங்கம், எஸ் ராமசுப்பிரமணியன், மீன்வளத்துறை ஆய்வாளர் சுமதி, மேற்பார்வையாளர் பாலு குமார் ஆகியோர் விற்பனை செய்யப்படும் மீன்களில் ஃபார்மலின் பதன பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்றும், தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, ரூபாய் 20000 மதிப்புள்ள, 46 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு. பொதுமக்கள் முன்னிலையில் கிருமி நாசினி தெளித்து. அழிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாநகரின் ஒவ்வொரு பகுதியிலும் இத்தகைய சோதனைகள் நடத்தப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி திரு ஏ ஆர் சங்கலிங்கம் தெரிவித்தார்.
0 Comments