திருநெல்வேலி மாநகர காவல்துறையின் முதல் பெண் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி இ.கா.ப. பதவியேற்றுக் கொண்டார்.
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
காவல் ஆணையாளர் C.மகேஸ்வரி இ.கா.ப.,
திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்த ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆகின்றது. கடந்த 4 மாதங்களாக மாநகர காவல்துறை ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், மாநகர் மற்றும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கொலை, மற்றும் குற்ற சம்பவங்கள் அரங்கேறியது.
இந்தநிலையில், திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளராக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து பின்னர் 2022 இல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று காவல் கண்காணிப்பாளராக, காவல்துறை துணை தலைவராக, பதவி உயர்வு பெற்று வட மாவட்டங்களிலும், தற்போது தென் மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகர காவல்துறையின் முதல் பெண் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி இ. கா.ப. வெள்ளிக்கிழமை(இன்று) பதவியேற்றுக் கொண்டார்
0 Comments