திருநெல்வேலி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இ. ஆ. ப., அறிவிப்பு
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இ. ஆ. ப.,
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இ. ஆ. ப. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டிகள் காந்தி பிறந்த நாளையொட்டி வருகிற 31-ந்தேதியும், நேரு பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் 3-ந்தேதியும் காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி டவுன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
காந்தி பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் பள்ளி மாணவர்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள்,வட்ட மேசை மாநாட்டில் காந்தியடிகள் என்ற தலைப்பிலும், கல்லூரிகளுக்கு காந்தியடி கள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்ட அளவில் நடக்கும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். திருநெல்வேலி மாவட்ட அளவில் நடக்கும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் செயல்பட்டு வரும் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண்: 0462 2502521) தொடர்பு கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments