தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி ஏற்பு : திருநெல்வேலி மாநகர காவல் துறை
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் C.மகேஸ்வரி, இ.கா.ப., கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் G.S.அனிதா.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.
என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் C.மகேஸ்வரி, இ.கா.ப., கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் G.S.அனிதா ஆகியோர் தலைமையில் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், அனைவரும் தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
0 Comments