பொதுமக்களுக்கு சாலை விதிமீறல்கள் பற்றிய விழிப்புணர்வு: திருநெல்வேலி மாநகர போக்குவரத்து காவல்துறை.
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் C.மகேஸ்வரி இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்கள் (கிழக்கு) K.சரவணகுமார் அவர்கள் (மேற்கு), G.S.அனிதா இ. கா .ப., கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் (தலைமையிடம்) ஆகியோர் வழிகாட்டுதலின் படி திருநெல்வேலி மாநகர போக்குவரத்துக்கு காவல் உதவி ஆணையாளர் காமேஸ்வரன், காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, மற்றும் போலீசார் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வாகனம் ஓட்டும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். அவை பின்வருமாறு,
1) ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்னரே வாகனத்தை ஓட்ட வேண்டும்.
2) இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்பொழுது ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்.
3)இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.
4) இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் இடது புறமாகவே ஓட்ட வேண்டும் இடது புறமாக வாகனத்தை முந்தக்கூடாது.
5) செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது.
6) குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது.
7) வாகன பதிவு எண் அரசு ஆணைப்படி சரியான அளவில் எழுதப்பட வேண்டும்.
8) வாகனத்தில் கண் கூசும் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
9) அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது.
10) சாலைகளில் வாகனங்களில் சாகசம் செய்யக்கூடாது.
போன்ற அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
0 Comments