Loading . . .




திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், இ. ஆ. ப., தலைமையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் நடைபயிற்சி பாதை தொடங்கப்பட்டது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

நடப்போம் நலம் பெறுவோம் : திருநெல்வேலி மாவட்டம்

நடப்போம் நலம் பெறுவோம் என்ற நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரம் நடக்கும் நடைப்பயிற்சி பாதைகள் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, என்.ஜி.ஓ. காலனி உதயா நகர் சந்திப்பில் நடைபயிற்சி பாதை தொடங்கப்பட்டது. அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று மீண்டும் உதயா நகர் சந்திப்பை வந்தடைந்தது. இந்நடைபயிற்சியின் மூலம் பொதுமக்கள் மிக்க மகிழச்சியடைந்தனர்.

இந்த நடைப்பயிற்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இ. ஆ .ப , சட்டமன்ற உறுப்பினர்கள், அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு நடை பயிற்சி மேற்கொண்டனர். இந்த சுகாதார நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை வசதிகள், ஓய்வெடுப்பதற்கான பகுதிகள் மற்றும் அமர்வ தற்கான நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப்பாதை பெண்கள் பாதுகாப்பாக நடைப்பயிற்சி செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடைபயிற்சி செய்பவர்களுக்கு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை உட்பட அனைத்து சுகாதார பரிசோதனைகளும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதை பொதுமக்கள் பயன்ப டுத்தி நடப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டு தங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணலாம் என மாவட்ட ஆட்சியர், கார்த்திகேயன் இ.ஆ. ப., தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் ராஜேந்திரன், நகர் நல அலுவலர் மருத்துவர் சரோஜா, மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள் அம்பிகா, சகாய ஜூலியட், சங்கீதா, முத்து சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News