திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மேயர் பி.எம். சரவணன், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
The Forecast 2 years ago திருநெல்வேலி
மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜு மற்றும் அரசு அதிகாரிகள்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மேயர் பி.எம். சரவணன் ஆய்வு செய்தார். அப்போது பிளாட்பாரங்களில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு அறிவுரை வழங்கினார். மேலும், அருகில் இருந்த கட்டண சுகாதார வளாகங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பயணிகள் வேண்டுகோளை ஏற்று பயணிகள் அமரும் இருக்கைகள் அருகிலேயே சுத்திகரிப்பு குடிநீரை வைக்க உத்தரவிட்டார்.
மேலும் இனிவரும் காலங்களில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார். அப்போது துணை மேயர் கே.ஆர். ராஜு மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
0 Comments