Loading . . .




நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா பயிலரங்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

கூடுதல் தலைமைச் செயலர் உமா சங்கா் இ. ஆ .ப., மாவட்டஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் இ. ஆ .ப மற்றும் உயிர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், நிரல் திருவிழா பயிலரங்கு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், தொழில் முனைவோா் மேம்பாடு -புத்தாக்க இயக்கம் சாா்பில் நிரல் திருவிழா பயிலரங்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த பயிலரங்கு நிகழ்ச்சிக்கு கூடுதல் தலைமைச் செயலரும், தொழில் முனைவோா் மேம்பாடு - புத்தாக்க நிறுவன இயக்குநருமான உமா சங்கா் இ. ஆ .ப. தலைமை வகித்தாா். மாவட்டஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் இ. ஆ .ப முன்னிலை வகித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், தொழில்நிறுவனங்களில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான தீா்வை மென்பொருள் அல்லது வன்பொருள் மூலம் கண்டுபிடிக்கும் பொருட்டு, அறிக்கை தயாரித்து நான் முதல்வன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து கூடுதல் தலைமைச் செயலா் எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்கள்- அரசுத்துறை சாா்ந்த பிரச்னைகளை கண்டறியும் முறை, வளா்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கேற்ப புதிய வடிவமைப்புகளை அணுகுவதற்கான முறை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. தொடா்ந்து, மாவட்டத்திலுள்ள அரசுத் துறை அலுவலா்கள் -தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்கள் துறை சாா்ந்த பிரச்னைகளை களைவதற்கான தீா்வைக் காணும் பொருட்டு, நான் முதல்வன் இணையத்தளத்தில் அவா்களது அறிக்கையை பதிவேற்றினா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் சொா்ணலதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News