Loading . . .




திருநெல்வேலி மாவட்டத்தில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் மின்சாரம் பயன்பாடு, சேமிப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி -பகிா்மான கழகம், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் சேரன்மகாதேவி பிரிவு சாா்பில் மின் சிக்கன வார விழா வியாழக்கிழமை முதல் வரும் 20 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் சிக்கனம், பயன்பாடு குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் உதவி மின் பொறியாளா் கைலாசமூா்த்தி, ஒலி - ஒளி காட்சியுடன், குறைந்த மின் பளுவில் அதிக திறனை வெளிப்படுத்தக்கூடிய மின் சாதனங்கள், அவற்றின் பயன்பாடுகள், அதனால் கிடைக்கும் மின்சார சிக்கனம் - பண சேமிப்பு குறித்துப் பேசினாா். இதில், மின் வாரிய அதிகாரிகள், கல்லூரி மாணவா், மாணவிகள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.


0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News