Loading . . .




திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வரவுள்ளது. தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கான பேரிடர் கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1070, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி- 101 & 112, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம்- 9498794987, மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு- 104, அவசர மருத்துவ உதவிக்கு- 108. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News