Loading . . .




திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் இயக்கவியல் துறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் உடலியக்கவியல்துறை சாா்பில் ‘ஞாபகம் வருதே -23’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் தலைமை வகித்தாா். துறைத் தலைவா் அனிதா வரவேற்றாா்.

கருத்தரங்கில், திருநெல்வேலி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை நரம்பியல் துறைத் தலைவா் சரவணன், மனநலத் துறையின் இணைப் பேராசிரியா் இராமானுஜம் ஆகியோா் பேசினா்.

கருத்தரங்கில் நினைவாற்றலை மேம்படுத்துதல், வயது மூப்பின் காரணமாக வரும் அல்சீமியா் போன்ற நோய்கள் வராமல் தடுப்பது குறித்து விளக்கப்பட்டது.

மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், துணை மருத்துவக் கண்காணிப்பாளா்கள் முகம்மது ரபி, கந்தசாமி மற்றும் பேராசிரியா்கள், உதவி பேராசிரியா்கள் மற்றும் இளநிலை மருத்துவ முதலாண்டு மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். உடலியக்கவியல் துறை இணைப் பேராசிரியா் ஹரிபாபு நன்றி கூறினாா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News