Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் மண் சரிவினால் போக்குவரத்து பாதிப்பு

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 40 மணி நேரத்திற்கு மேல் விடாமல் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மாஞ்சோலை சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மணிமுத்தாறிலிருந்து மாஞ்சோலை செல்லும் மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை மாஞ்சோலை சுற்றுலா சென்ற 4 வாகனங்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. வனச்சரகா் சத்ய வேல் தலைமையில் வனத்துறையினா் மண் சரிவை சரி செய்ததையடுத்து சுற்றுலா வாகனங்கள் கீழிறங்கின. தாமிரவருணியில் பாபநாசம் கோயில் படித்துறையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News