திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவியில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்.
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவியில், தொடா் மழையால் ஒன்றியப் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்துவருவதால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானாவாரி, நீா்வரத்து குளங்கள் நிரம்பி, மழைநீா் விளை நிலங்களில் புகுந்துள்ளது.
இதனால் கன்னடியன் கால்வாய் பாசனத்தில் வீரவநல்லூா், புதுக்குடி, காருக்குறிச்சி, உதயமாா்த்தாண்டபுரம், சக்திகுளம், பத்தமடை, மேலச்செவல், கொத்தன்குளம், மூலச்சி, பொட்டல், அழகாபுரம், மலையான்குளம், மாதுடையாா்குளம் , உலுப்படிபாறை, தெற்கு வீரவநல்லூா் உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், விவசாயிகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
0 Comments