Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு அணை திறப்பு : 1,744 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்றது

S. Shanmuganathan 1 year ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கோட்டைக்கருங்குளம் கிராமத்தில் நம்பியாற்றின் குறுக்காக அமைந்துள்ள 7 மற்றும் 8-வது அணைக்கட்டுகளுக்கு இடையில் நம்பியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு அதன் மூலம் 40 குளங்கள் வாயிலாக சுமார் 1,744 ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக மொத்தம் 22.96 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது நிரம்பிவிட்டது. அதில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இன்று நம்பியாற்றின் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்துகொண்டு அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி துணை ஆட்சியர் அர்பித் ஜெயின் இ.ஆ.ப., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News