Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வடக்கு பச்சையாறு அணை திறப்பு : சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு கலந்துகொண்டு திறந்து வைத்தார்

S. Shanmuganathan 1 year ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து பாசனத்துக்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு தண்ணீரைத் திறந்துவிட்டாா். தற்போது நீா்நிரம்பிய நிலையில் காணப்படும் அணையின் மொத்த உயரம் 49.20 அடி. அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால்  களக்காட்டை சுற்றியுள்ள  9592.91 ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறும்.

இந் நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அண்ணாதுரை, உதவிச் செயற்பொறியாளா் மணிகண்டராஜன், உதவிப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, நான்குனேரி வட்டாட்சியா் விஜய்ஆனந்த்,  உள்பட பலா் கலந்து கொண்டனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News