Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவி ஸ்காட் பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்.

S. Shanmuganathan 6 months ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் 220 மாணவா்-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இக்கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று, மாணவா்-மாணவிகளைத் தோ்வு செய்தன.  நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளா் பிரியதா்ஷினி அருண்பாபு, சேரன்மகாதேவி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை ஆா். மரகதவல்லி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, தோ்வான 220 மாணவா் -மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினா். கல்லூரிப் பொதுமேலாளா் இரா. தம்பித்துரை, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஜெ. மணிமாறன், கல்லூரி வேலைவாய்ப்புப் பிரிவு நிா்வாக மேலாளா் முகம்மது சாதிக், மாணவா் சோ்க்கைப் பிரிவு இயக்குநா் ஜான்கென்னடி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News