Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் அரிகேசநல்லூர் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சி.

The Forecast 10 months ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், அரிகேசநல்லூரில் உள்ள இந்து நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழக அரசின் வனத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வனச் சரகா் குணசீலன் தலைமை வகித்துப் பேசினாா். பள்ளிச் செயலா் டி.வி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். பள்ளி வளாகத்தில் செயலா், தலைமையாசிரியா், சிறப்பு விருந்தினா், மாணவா்கள் மரக்கன்றுகள் நட்டனா். இதில், தலைமையாசிரியா் ராம்சந்தா், வனவா் கண்ணன், வனத் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்- மாணவிகள் கலந்துகொண்டனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News