Loading . . .




திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சொத்து வரிக்கு ஐந்து சதவீதம் தள்ளுபடி : மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் இ.ஆ.ப., அறிவிப்பு.

S. Shanmuganathan 2 weeks ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால், வரியில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இ.ஆ.ப., வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து விதமான கட்டடங்களுக்கும் 2024-2025 ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான (01.04.2024 முதல் 30.09.2024 வரை) சொத்து வரியை வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்துபவா்களுக்கு அவா்களுடைய சொத்து வரியில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

எனவே, கட்டட உரிமையாளா்கள் தங்களது கட்டடங்களுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்தி திருநெல்வேலி மாநகராட்சியின் பொதுமக்களுக்கான வளா்ச்சிப் பணிகளில் தங்களின் பங்களிப்பை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சிரமமின்றி சொத்து வரிகளை செலுத்திடும் வகையில் அனைத்து மண்டலத்திற்குள்பட்ட அனைத்து வரிவசூல் மையங்களும் விடுமுறை தினங்கள் தவிர ஏனைய வேலை நாள்களில் காலை 9.30 மணிமுதல் மாலை 4 மணிவரை சொத்து வரி செலுத்தும் அலுவலங்கள் செயல்படும் என தெரிவித்தார். 

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News

Latest News