தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையோடு குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
0 Comments