Loading . . .




டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின், 2-வது கட்ட லீக் போட்டியில் வென்றது திருப்பூர் அணி!

The Forecast 1 year ago கிரிக்கெட்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின், 2-வது கட்ட லீக் போட்டிகள் கோவை அவிநாசி சாலையில் உள்ள, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

முதல் போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த மதுரை பேந்தர்ஸ் அணியின் சார்பில், கேப்டன் ஹரி நிஷாந்த், விக்கெட் கீப்பர் லோகேஸ்வர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

இதில் சிறப்பாக விளையாடிய அனிருத் 28 பந்துகளில் 52 ரன்கள், இறுதியில் முகமது அலி 34 ரன்கள்,மதிவாணன் 4 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர். ஐட்ரீம் திருப்பூர் அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணி  வெற்றி பெற்றது.


0 Comments

Post your comment here

கிரிக்கெட் Relateted News