Loading . . .




செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களின் இரங்கல் செய்தி

The Forecast 3 years ago செய்தித்துறை

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களின் இரங்கல் செய்தி பத்திரிகை துறையில் நீண்ட அனுபவமும், “The NewIndian Express” நாளிதழில் இசை மற்றும் நடனம் தொடர்பாக பல ஆண்டு காலமாக விமர்சன கட்டுரை எழுதிய வருமான டி.சீனிவாசன் அவர்கள் மாரடைப்பு காரணமாக 92 வயதில் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். இவர் இசை மற்றும் நடனத்தில் மிகச்சிறந்த விமர்சகராக திகழ்ந்தார்.

அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு பத்திரிகைத் துறையை சார்ந்த நண்பர்கள் சார்பாகவும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News