முதல்முறையாக டி20 மகளிர் உலகக்கோப்பையை வென்று இந்தியாவிற்குக் கவுரவம் சேர்த்திருக்கும் தேசிய கிரிக்கெட் அணியை, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பாராட்ட உள்ளார் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
வரவிருக்கும் புதன்கிழமை அன்று டெல்லியில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய மகளிர் அணிக்கு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னணி விளையாட்டு வீரர்கள், மற்றும் பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. வரலாற்றுச் சாதனை படைத்த வீராங்கனைகளை கௌரவிக்கும் விதமாக இந்த சந்திப்பு அமையவுள்ளது.
0 Comments