பெயர் மாற்றம் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி க்கு புதிய உத்தரவு. கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.இ.ஆ.ப.,
The Forecast 3 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு (மாநகராட்சிகள்,
நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) உட்பட்ட சாலைகள், கட்டடங்கள்,
பேருந்து நிலையங்கள் பெயரிடல் மற்றும் பெயர் மாற்றம்
செய்வதற்கான முன்மொழிவுகள் அரசிற்கு அனுப்பப்பட்டு, அரசின்
அனுமதி பெற்ற பின்னரே மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட
வேண்டும் என்பது தொடர்பான அறிக்கை.
***
நாகர்கோவில் மாநகராட்சியில் பாலமோர் பகுதியில் உள்ள பழமையான கட்டடம்
இடிக்கப்பட்டு தற்போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான கட்டடம் புதியதாக
கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்திற்கு பெயரிடுவதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இக்கட்டடம் ஏற்கனவே இருந்தவாறே, கலைவாணர் அவர்களின்
பெயரிலேயே
அழைக்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-ன் பிரிவு 189 மற்றும்
கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981-ன் பிரிவு 266 (மற்ற மாநகராட்சிகளுக்கும்
பொருந்த கூடியது) முதலானவற்றில், அரசின் அனுமதி பெற்ற பின்னரே. மன்றங்கள்
மற்றும் மாமன்றங்கள் அனைத்து நகராட்சி சொத்துக்களுக்கு பெயரிட வேண்டும் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மேற்குறிப்பிட்ட சட்டவிதிகளை பின்பற்றாமல், அரசின் ஒப்புதலின்றி
நகராட்சி சொத்துக்களுக்கு பெயர் வைப்பதற்கான முன்மொழிவுகளை மன்றத்தில் வைத்து
தீர்மானங்கள் இயற்றப்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளுக்குட்பட்டு, மாநகராட்சி, நகராட்சி மற்றும்
பேரூராட்சிகளுக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள்,
கட்டடங்கள், பூங்கா, விளையாடுமிடங்கள் முதலியவற்றிற்கு பெயர் வைப்பது அல்லது
பெயர் மாற்றுவது தொடர்பான முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக இயக்குநர் /
பேரூராட்சிகளின் ஆணையாளர் வழியாக அரசிற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும்,
அரசின் அனுமதி பெற்ற பின்னரே பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த
தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்படுதல் வேண்டும்எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments