செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கூட்டம்
The Forecast 3 years ago செய்தித்துறை
செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன் அவர்கள்
தலைமையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கோயம்புத்தூர், மதுரை,
திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும்
இம்மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின்
பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன் அவர்கள்
தலைமையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கோயம்புத்தூர், மதுரை,
திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும்
இம்மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின்
பணி ஆய்வுக் கூட்டம் (16.08.2022) சென்னை, மாநில செய்தி நிலையக்
கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தனது
உரையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான
இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம்
பல்வேறு பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. செய்தி மக்கள்
தொடர்புத் துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
சட்டமன்றப் பேரவையிலும், பல்வேறு அரசு விழாக்களில் வைக்கப்படும்
கோரிக்கைகளின் அடிப்படையிலும் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகள்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு செய்தி மக்கள்
தொடர்புத் துறையின் 2021-2022 மற்றும் 2022-2023 மானியக்
கோரிக்கைகளின் அறிவிப்புகள் ஆகியவற்றில் நிலுவையில்
விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, சிலைகள்
வைப்பதற்கும், அரங்கங்கள் கட்டுவதற்கும் இடங்கள் தேர்வு செய்வது தொடர்பாக
விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
0 Comments