ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.37.66 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார்.
The Forecast 3 years ago அரசு செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (2.11.2022) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 9 கோடியே 92 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 6 விடுதிக் கட்டடங்கள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 51 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 பள்ளிக்கட்டடங்கள் மற்றும் செங்கல்பட்டு, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 17 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிக் கட்டடங்களை திறந்துவைத்தார்.
பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு Indian Institute of Technology மூலம் B.S. Data Science & Applications, எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில பயிற்சி தொகை, Indian Health Care மூலம் Medical Coding பயிற்சி, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்ட்யூட் மூலம் B.Sc., (Hospitality & Hotel Administration) மற்றும் Diploma in Food Production, Craftsman Ship ஆகிய வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிக்கு தேர்வாகியுள்ள 130 மாணவ, மாணவியர்களுக்கு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9 மாணவ, மாணவியர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் .தா.மோ. அன்பரசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் . உ. மதிவாணன். தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு ஜவஹர், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் . த. ஆனந்த், இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் .கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப. பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் . ச. அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments