விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம்
The Forecast 3 years ago அரசு செய்திகள்
விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள்
வழங்கும் திட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் அவர்கள் (11.11.2022) கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தமிழ்நாடு
மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில்,
விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை
தொடங்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.
எரிசக்தி துறையின் 2021-2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், விவசாய உற்பத்தியினை பெருக்கி,
விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு இலட்சம் புதிய
விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இதுவரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 23.9.2021
அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் 3,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, எரிசக்தித் துறையின் 2022-23ஆம் ஆண்டு
மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும்,
விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடனும் நடப்பு நிதியாண்டில் 50,000 எண்ணிக்கையில்
புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இவ்விழாவில்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்வி. செந்தில்பாலாஜி ,
செய்தித் துறை அமைச்சர் . சாமிநாதன் , ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி
செல்வராஜ் ,நாடாளுமன்ற உறுப்பினர், செ. ஜோதிமணி ,
சட்டமன்ற உறுப்பினர்கள். இரா. மாணிக்கம் ,த. ஆர். இளங்கோ ,
எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் த. ரமேஷ் சந்த் மீனா,இ.ஆ.ப., ,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் . ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப.,, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர், இ.ஆ.ப., ,அரசு துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய உயர் அலுவலர்கள், கலந்துகொண்டனர்.
0 Comments