10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு
The Forecast 3 years ago அரசு செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் (12.11.2022) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில்,
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்த
மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், சட்டத் துறை அமைச்சர்
எஸ். ரகுபதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்
. பி. வில்சன், இந்திய தேசிய காங்கிரஸ்
கட்சியின் சார்பில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் . கு. செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர்
அசன் மௌலானா, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், வழக்கறிஞர் . பாலு, மறுமலர்ச்சி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் . வைகோ, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டி. சதன்திருமலைகுமார், விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் . தொல். திருமாவளவன், . கே. ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்
ஆர், முத்தரசன், - பெரியசாமி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் . வி.பி. நாகைமாலி, . மா. சின்னதுரை,
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, . ப. அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில்
சட்டமன்ற உறுப்பினர் . தி. வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் . ஏ.கே.பி. சின்ராஜ்,
. சூரியமூர்த்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments