Loading . . .




மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள்

The Forecast 3 years ago திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


திண்டுக்கல் ஓம்சாந்தி பள்ளி வளாகத்தில் இன்று(09.11.2022) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சிறப்பு முகாம்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளின்பேரில், தேர்வு செய்யப்பட்ட 87 மாற்றுத்திறனாளிகளுக்கு, பிரிடம் அறக்கட்டளை, டிரீம் ரன்னர்ஸ், ஹெக்ஸ்அவேர்ஸ் ஆகியவை சார்பில் வழங்கப்பட்ட செயற்கை கால்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், பிரீடம் அறக்கட்டளை நிறுவனர் திரு.சங்கரன், ஹெக்ஸ்அவேர்ஸ் திரு.லோகாபிராம், டிரீம் ரன்னர்ஸ் திரு.சுரேஷ், பிரீடம் அறக்கட்டளை திருமதி உஷாபரத்வாஜ், ஓம்சாந்தி பள்ளி தாளாளர் திரு.இ.என்.பழனிச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

திண்டுக்கல் Relateted News