Loading . . .




உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி அரசானை வெளியீடு - ஊரக உள்ளாட்சி அனைப்புகளின் நிர்வாகத்தில் மாற்றத்தை உருவாக்கும்

The Forecast 3 years ago அரசு செய்திகள்

ஊராட்சிகளுக்கு அலுவலகங்களாக கிராம செயலகங்கள், உள்ளாட்சி

பிரதிநிதிகளுக்கு அமர்வு படி உயர்வு, கிராம சபைக்கு உரிய அங்கீகாரம், பல்வேறு இணைய வழி சேவைகள், ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வாகன

போன்ற அறிவிப்புகள்

வெளியிடப்பட்டு வசதிகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம்வ  வைத்தாற்போல உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை தற்போது

உயர்த்தி வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் வலுவூட்டும்வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில் 6.12.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய அரசாணையின்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 இலட்சம் வரையிலும். வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.25 இலட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 இலட்சம் வரையிலும் பணிகளை தாமாகவே உரிய தீர்மானம் நிறைவேற்றி மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பரவலாக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளாட்சியில் நல்லாட்சியை கிராமப்புற மக்களுக்கு வழங்க வழிவகை ஏற்படுத்தும்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News