மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
The Forecast 3 years ago திண்டுக்கல்
திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறினார். அருகில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கூடுதல் தலைமைச் செயலர் (இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை) டாக்டர் அதுல்யாமிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், நில நிர்வாக ஆணையர் மற்றும் அரசு சிறப்புச் செயலர் திரு.எஸ்.நாகராஜன், இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.கே.பி.கார்த்திகேயன். இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் உட்பட அரசு அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments