306 கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்களின் அறிவிப்பு
The Forecast 3 years ago திண்டுக்கல்
306 கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்களின் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் / பயனாளிகளுக்கான மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்களின் அறிவிப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தினை மேலும், வெளிப்படைத்தன்மையாக பொருட்டு புகைப்படத்துடன் கூடிய புவிசார் புகைப்படங்கள் (Geo-Tagged Photos) (NMMS App) செயலி மூலம் வருகைப் பதிவு விவரம் ஏற்கனவே, பணித்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
01.01.2023 முதல் தனிநபர் அல்லாத அனைத்து சமுதாய பணிகளும் மேற்குறித்த செயலி மூலமாகவே வருகைப்பதிவேடு பதிவு செய்து, அதனடிப்படையில் மட்டுமே ஊதியம் பணியாளர்கள் / பயனாளிகளுக்கு வழங்கப்பட அரசால் உத்தரவிடப்பட்டுள்ளதால், பணித்தளங்களில் NMMS App செயலி மூலம் இரண்டு நேரங்களிலும் (முற்பகல் மற்றும் பிற்பகல்) வருகைப்பதிவேடு 100% எடுத்திட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஊறுதித் திட்ட பணியாளர்கள் / பயனாளிகள் ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்
0 Comments