Loading . . .




சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ”கள ஆய்வில் முதலமைச்சர்”

The Forecast 3 years ago அரசு செய்திகள்

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்  (16.2.2023) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ”கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின்

சேலம், நாமக்கல், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  இளைஞர் நலன் மற்றும்

விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் . உதயநிதி ஸ்டாலின்,  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்  ஆர். காந்தி,  வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல்

தலைமைச் செயலாளர்  எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.,

வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  குமார் ஜயந்த், இ.ஆ.ப., சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளர்

த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., அரசுத் துறைச் செயலாளர்கள், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் . எஸ். கார்மேகம், இ.ஆ.ப., நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங், இ.ஆ.ப., கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்  தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர்  கே. சாந்தி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News