Loading . . .




ஈரோடு கிழக்கு தொகுதியில் 75 சதவீத வாக்குகள் பதிவானது: நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

The Forecast 3 years ago ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி தொகுதியில் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் கூறினர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த மாதம் 4ம் தேதி மரணமடைந்ததையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.  திமுக கூட்டணியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் மேனகா உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை துவங்கியது. இதற்காக தொகுதி முழுவதும் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும்,  சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டு, வாக்குச்சாவடி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 7 மணி முதல் பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தொடக்கம் முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், வாக்காளர்கள் சின்னங்களை கண்டுபிடித்து வாக்களித்தனர். இதனால் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. மேலும், வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர், 200 மீட்டர் அளவுகளில் எல்லைக் கோடுகள் வரையப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு நடைபெற்ற 238 வாக்குச்சாவடிகளில், பதற்றமானவையாக காணப்பட்ட 34 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து வாக்குசாவடிகளிலும் சிசிடிவி கேமரா மூலம் வாக்குபதிவு  கண்காணிக்கப்பட்டது.

தொகுதியில் பதற்றமான வாக்குசாவடிகளில் வெளிப்புற பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் எளிதில் சென்று வாக்களிக்க ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டிருந்தது. வெயில் கடுமையாக இருந்ததால் வாக்குசாவடி முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் ஆண்கள் 12,679 பேரும், பெண்கள் 10,294 பேரும் என 22,973 பேர் வாக்களித்திருந்தனர். 11 மணி நிலவரப்படி 27.89 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 

0 Comments

Post your comment here

ஈரோடு Relateted News